Photo : Moamen Messi, National Geographic.
On the Superstition Mountains, Apache Junction, AZ,
A few days each year, for just a few minutes, the sun projects a larger-than-life shadow of a cougar chasing its prey
Timing is critical. This phenomenon only happens when the sun sets at just the right latitude on the western horizon. The cougar only appears during the third week of March and September.
கல்லிடைகுறிச்சி என்பது திருநெல்வேலியில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பொதுவாக ஊர் பெயர்களில் குறிச்சி ,ஊர் ,குடி ,பாடி ,சேரி , கோடு,பட்டினம் ,பாக்கம் ,காவு ,காடு ,கா என்றெல்லாம் ஊர்களுக்குப் பொதுப் பெயர் இட்டு வழங்கினர் .நிலங்களுக்கு ஏற்ற வகையில் இப்பெயர்கள் அமைத்தனர். இவை இடுகுறிச் சிறப்புப் பெயர்களாக அமைந்தன, .இதில் கல்லிடைகுறிச்சி என்பது கல் + இடை + குறிச்சி என்பதை குறிக்கும், இதன் அர்த்தம் மலைகளின் நடுவே அமைந்த ஊர் என்பதாகும். இந்த ஊரின் பின்னே இருக்கும் மலை தொடரே பாண்டிய, சேர மன்னர்களின் எல்லை கோடாக இருந்தது எனலாம்.
அப்பளம், பப்படம், பப்பட், அப்பளா என பல பெயர்களில் அழைக்கப்படுகிற இந்த மொறுமொறு அயிட்டம், இந்திய உணவில் பெரும் பங்கு வகிக்கிறது. திருவிழா மற்றும் விசேஷங்களில் காய்கறிகளும் உளுந்தில் செய்த பப்படமும் இடம்பெற்றிருந்ததாக சங்க இலக்கியங்களில் கூறப்படுகிறது.
‘அப்பளித்துருட்டுபவது’ என்பதே அப்பளமானது என்று தேவநேயபாவாணர் விளக்கம் அளிக்கிறார். அப்பளித்தல் என்றால் சமனாகத் தேய்த்தல் என்று பொருள். அப்பளமானது உளுந்து, அரிசி, மரவள்ளிக்கிழங்கு போன்ற மூலப்பொருட்களிலும் மிளகு, பச்சை மிளகாய், சீரகம், பெருங்காயம் போன்ற உப பொருட்களிலும் தயாராகிறது. வாயில் ஒட்டும் வட இந்திய அப்பளங்கள் உணவகங்களில் பல்வேறு விதமாக பரிமாறப்படுகின்றன. பொருட்காட்சிகளின் பிரமாண்ட பிகானீர் டெல்லி அப்பளத்துக்கு மயங்காதவர் யார்? இப்படிப்பட்ட சுவைப் புகழ் கொண்ட ராஜ அப்பளங்களில் மிகச் சிறந்தவை தயாராவது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சியில்தான்! அப்பளம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உணவே. மழைக்காலத்தில் காய்கறிகள் கிடைக்காது என்பதால் ஏதேனும் சில உணவுகளை சேகரித்து வைக்கும் வழக்கில் வந்தவையே அப்பளம், வடாம், வற்றல் போன்றவை. அந்தக் காலத்தில் அப்பளம் இடுவது என்பது பெரிய கலையாகவே இருந்து இருக்கிறது.
அப்பளத்தால் லட்சக்கணக்கான பெண்கள் பயன்பெறுகின்றனர் என்பதற்கு இந்த அப்பளமே சாட்சி. தேவன் ‘அப்பளக் கச்சேரி’ கதையில், அப்பளம் இடுவது வெறும் வேலையாக மட்டுமே அல்லாமல், அதில் பெண்களின் வாழ்க்கையே அடங்கியிருந்தது என்பதை நகைச்சுவையாகக் கூறியிருப்பார். இந்திய அப்பளம் உலகெங்கும் பரவி பப்பட், ஃப்ளாட் பிரெட், இண்டியன் பிரெட் என்ற பெயர்களில் புழக்கத்தில் இருக்கிறது. கல்யாணம் என்றால் இலையில் முதலிடம் பிடிக்கும் அப்பளம் கடவுளுக்கு படைப்பதிலும் இடம் பெறுகிறது. குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் ‘அன்னபிரசன்னம்’ எனப்படும் குழந்தைகளுக்குச் சோறு ஊட்டுதலில் அப்பளமும் உண்டு.
என்னதான் 5 நட்சத்திர ஹோட்டலில் விருந்தாக தினம் உண்டாலும், ரசத்துக்கும் சுட்ட அப்பளத்துக்கும் ஒரு கட்டத்தில் நம் நாக்கு ஏங்குவது, அப்பளம் நம் வாழ்வில் எத்தனை முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது என உணர்த்தும். அப்பளம் பிடிக்காத குழந்தை என்று சுட்டிக் காட்டுவதும் கடினம். ‘மொறுமொறுவென பொரித்த அப்பளம் விருந்துக்கு என்றால், நெருப்பில் சுட்ட அப்பளம் மருந்துக்கு... மீதமான அப்பளம் குழம்புக்கு’ என்று அதிலும் பலவகை பயன்பாட்டை வைத்திருக்கிறோம். பொரித்த அப்பளத்தை பாயசத்தில் கலந்து சாப்பிட ஒரு ரசிகர் படையே இருக்கிறது. சாவியின் ‘வாஷிங்டனில் திருமணம்’ நாவலில் ஒரு வெளிநாட்டுத் தம்பதி அப்பள மகிமையை வியந்து போகும் விதம் குறித்து எழுதியிருப்பார்.
பொதுவாகவே வெயில் சுட்டெரிக்கும் ஊர்தான் நம்முடையது என்றாலும், மற்ற காலங்களைவிட பங்குனி, சித்திரையில் இடப்படும் அப்பளங்களுக்கு தனி ருசி உண்டு. தமிழகம் வழக்கம் போல, ஒவ்வொரு உணவுப்பொருளுக்கும் ஒரு சிறப்பான இடத்தை - ஊரை வைத்திருப்பது போல அப்பளத்துக்கும் தனியாக ஓர் ஊரையே வைத்திருக்கிறது. கல்லிடைக்குறிச்சி அப்பளம் தமிழகம் மட்டும் இன்றி உலகம் முழுதும் விற்பனையாகிறது.
‘‘கல்லிடைக்குறிச்சி அப்பளம் ருசிக்க முக்கிய காரணம் தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரே. உளுந்தில் செய்யப்படும் சாதாரண அப்பளம் மட்டுமல்ல... இரண்டு உளுந்து அப்பளங்களை ஒன்றாக சேர்த்துச் செய்யப்படும் டபுள் அப்பளம், உளுந்து அப்பளம், மிளகு அப்பளம், கார அப்பளம், அரிசி அப்பளம், மரவள்ளிக்கிழங்கு அப்பளம், ரிப்பன் வடகம், குச்சி வடகம், தேன்குழல் வடகம், ஓமபோடி வடகம், வெங்காய வடகம், இலை வடகம், அப்பள சிப்ஸ் என்று பல வகைகள் இருக்கிறது.
தமிழகத்தின் தென்பகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தில் , தென்பொதிகையின் அடிவாரத்தில் உள்ள ஒரு அழகான கிராமம் கல்லிடைக்குறிச்சி. அது வற்றாத ஜீவ நதி தாமிரபரணியின் செல்லக் குழந்தை . பசுமையான வயல் வெளிகளும், தோட்டங்களும் , தென்னந் தோப்புகளுமானச் செழிப்பான பூமி. பதினெட்டு அக்ரஹாரங்கள். அந்தக் காலத்தில் , அதுதான் 1950களில் அக்ரஹாரம் முழுவதும் பிராமணர்களே குடியிருந்தார்கள். தவிர செட்டிப் பிள்ளைமார் தெரு, முதலிமார் தெரு, பள்ளிவாசல் தெரு, மாதாகோவில் தெரு என்று அனைத்து மக்களும் அன்போடு இன்றும் வாழ்கின்ற ஊர். ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு கோவிலும் உண்டு. ஸ்ரீ ஆதிவராஹப் பெருமாள் கோவில்தான் மிகப் பழமையானதும் , குபேரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதுமான புகழ் மிக்க ஒன்று. தவிர டுண்டிவினயகர், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ வாழ உகந்த அம்மன், ஸ்ரீ வடக்கு பார்த்த செல்வி, ஸ்ரீ அகஸ்தியர், ஸ்ரீ குமாரன், ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி, ஸ்ரீ தர்மசாஸ்தா, ஸ்ரீ காமாக்ஷி, ஸ்ரீ வடிவாம்பிகை உடனுறை ஸ்ரீ மானேந்தியப்பர் , ஸ்ரீ காந்தாரி அம்மன் இவை தவிர சிறு சிறு பிள்ளையார் கோவில்களும் உண்டு. சித்திரை மாத ஸ்ரீ ஆதிவராகர் தேரோட்டம் மிகப் பிரபலம்.
சரித்திர ஆராச்சியாளர் நீலகண்ட சாஸ்திரி, சிறுகதை, நாவல் என்று முத்திரை பதித்த “ஆதவன்”, பாரதிக்கு தொண்டு செய்துவரும் பாரதி காவலர் கு. ராமமூர்த்தி, திரைபடத் துறையில் குறிப்பாக “டப்பிங்” தொழிலில் சிறந்து விளங்கி , இராமாயணம், கிருஷ்ணா போன்ற சின்னத்திரை நீண்ட தொடர்கள் மூலம் அனைவருக்கும் தெரிந்த கவிமாமணி கு. தேவநாராயணன் போன்ற இலக்கிய வாதிகளையும் இந்த உலகத்துக்குத் தந்து மகிழ்தது இவ்வூர்.
டைரக்டர் சங்கர் எடுத்த ஜென்டில்மேன் படம் முழுக்க,முழுக்க இங்கு தான் எடுக்கப்பட்டது.
Pongal celebrations in Mylapore, 2023, Jan 15.
At the gym
Gayle on fire. 12 ball 50
Fake video thru AI
So unfortunate that this true
Time or fate can do strange things
How sounds from Vishnu, Lalitha sahasranamam affect us
The future of digital world, electronics. Very nice
Naattu naattu with Laurel and Hardy
No comments:
Post a Comment